Teachers Dress Code: இனி அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்.. குட்நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்.!

பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், பேண்ட், சட்டையும், ஆசிரியைகள் சேலையும் அணிந்து செல்வது வழக்கம்.

government school teachers can now wear chudidhar... Minister Anbil Mahesh tvk

அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சுடிதார் அணியலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் எண்ணற்ற அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அதிகளவில் உள்ளன. இந்த பள்ளிகளில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், பேண்ட், சட்டையும், ஆசிரியைகள் சேலையும் அணிந்து செல்வது வழக்கம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் தமிழக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அரசாணை எண் 67-ஐ வெளியிட்டது. அதில் பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற பாரம்பரிய உடைகளை அவரவர் வசதிக்கு ஏற்ப அணிந்து கொள்ளலாம் என்றும் ஆண் ஆசிரியர்கள் தமிழக பாரம்பரிய அடையாளமான வேட்டி, சட்டை, சாதாரண பேண்ட், சட்டை என தங்களுக்கு பிடித்தமானவற்றை அணியலாம் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த அரசாணையைக் குறிப்பிட்டு, ஆசிரியர்கள் சுடிதார் அணிந்து வரலாம் என்று பெண் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். எனினும் இதற்கு சில ஆசிரியர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சுடிதார் அணியலாம் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- இபிஎஸ் கோட்டையில் வேட்டை! முன்னாள் எம்.எல்.ஏவை தட்டித் தூக்கிய பாஜக! குஷியில் அண்ணாமலை! அதிர்ச்சியில் அதிமுக!

இந்நிலையில் கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில்  379 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்களது விருப்பப்படி, புடவையோ அல்லது சுடிதாரோ அணியலாம் என்று தெரிவித்தார். மேலும் பணியாளர் விதிகளுக்கு உட்பட்டு எதனை அணியவேண்டும் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்று தெரிவித்துள்ளார்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios