வேலை நிறுத்த போராட்டம் தேவையா.? பண்டிகை காலத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது ஏன்.? ஐகோர்ட் கேள்வி

அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்  இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழக அரசு பிற்பகலில் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Government of Tamil Nadu to decide on grant of subsidy to pensioners Instruction of Court KAK

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

15-ம் ஊதிய ஒப்பந்த பேச்சுகளை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து துறை சார்பாக வெளியாட்களை பயன்படுத்து பேருந்தை இயக்கி வருகிறது. இந்தநிலையில் போக்குவரத்து துறை வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்றது.

அப்போது தொழிற் சங்கங்கள் சார்பாக வாதிடுகையில், ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்திருந்தாலும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை ஜனவரி மாதத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். முன்னரே நோட்டீஸ் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். 

Government of Tamil Nadu to decide on grant of subsidy to pensioners Instruction of Court KAK

வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்பு

தமிழக அரசு சார்பாக வாதிடுகையில், பேச்சுவார்த்தை பல கட்டங்களிலும் நடந்து முற்று பெறாத நிலையில் ஜனவரி 19ஆம் தேதி அடுத்தக்கட்ட  பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சட்டவிரோதமாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.   அப்போது தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அமர்வு கூறுகையில்,  தமிழகத்தின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான் பொதுமக்கள் தான். நகரத்தில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர், பாதிக்கப்பட்டுள்ளனர். 

Government of Tamil Nadu to decide on grant of subsidy to pensioners Instruction of Court KAK

ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி

போராட்டம் நடத்த உரிமை இல்லை என கூறவில்லை. தற்போதை பண்டிகை நேரத்தில் அந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்றுதான் கூறுகிறோம். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்  இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழக அரசு பிற்பகலில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

பொங்கல் வரை போராட்டம் நீடித்தாலும் பயணிகளுக்கு சிரமம் இருக்காது - அமைச்சர் தகவல்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios