தமிழகத்தில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், இயக்குநர்கள்,மாநகராட்சி ஆணையர்கள் இட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
12 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்ற இருப்பதாக தகவல் வெளியானது. இந்தநிலையில், தற்போது முதல்கட்டமாக பல்வேறு துறைகளின் செயலாளர்கள், இயக்குநர்கள்,மாநகராட்சி ஆணையர்கள் இட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மதுரை மாநகராட்சியின் ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் கஹ்லோன் ஐஏஎஸ் நியமனம்
கோவை மாநகராட்சி ஆணையராக பிரதாப் ஐஏஎஸ் நியமனம்
திருச்சி மாநகராட்சி ஆணையராக வைத்தியநாதன் ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக சிவா கிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ் நியமனம்
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக ஆனந்த் மோகன் ஐஏஎஸ் நியமனம்
ஆவடி மாநகராட்சி ஆணையராக தற்பகராஜ் ஐஏஎஸ் நியமனம்
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக கார்த்திகேயன் ஐஏஎஸ் நியமனம்
கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக சங்கர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார
வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கூடுதல் செயலராக விஜயலட்சுமி நியமனம்
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குனராக ராஜகோபால் சுங்கரா நியமனம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கூடுதல் இயக்குனராக கார்த்திகா ஐஏஎஸ் நியமனம்
உள்ளிட்ட 12 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது