பேராசிரியரின் பணி இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்... எவ்வளவு பாசம்!!!
பேராசிரியரின் பணி இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கரூரில் உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்
பேராசிரியரின் பணி இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கரூரில் உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகேவுள்ள ஐயர்மலையில் குளித்தலை அரசு கலைக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்குப் பணியாற்றிய கணினி அறிவியல் துறை பேராசிரியர் கோவிந்தராஜ், தமிழ்துறை துறைத் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் சிவகங்கையில் உள்ள கல்லூரிக்கும், தமிழ்துறையின் உதவி பேராசிரியரான ஜெகதீசன் கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரிக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், "பேராசிரியர் கோவிந்தராஜ் பணி இடமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்" என்றும் "அவரை மீண்டும் குளித்தலை கல்லூரியிலேயே பணியாற்ற உத்தரவிட வேண்டும்" என்றும் கணினி அறிவியல் துறை மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து நேற்று போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அறிந்த கல்லூரி முதல்வர் கௌசல்யாதேவி, குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமார், ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், "அவர்களின் கோரிக்கையை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கிறேன்" என்று கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
அதன்பின்னர் மாணவர்கள், "தற்காலிகமாக தங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாகவும், நாளை (அதாவது இன்று) மீண்டும் போராட்டத்தைத் தொடர்வோம்" என்றும் தெரிவித்தனர்.
பேராசிரியரின் பணி இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.