Asianet News TamilAsianet News Tamil

இன்று முதல் கேபிள் டிவியில் உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை.! காரணம் என்ன.? வெளியான முக்கிய தகவல்

கேபிள் டிவி ஒளிப்பரப்பு மேற்கொள்ளும் அனைத்து MSOகளும் ஒளிப்பரப்பப்படும் மொத்த சேனல்களின் எண்ணிக்கையில் 5% சேனல்களை மட்டுமே மாநில அளவிலான உள்ளூர் தொலைக்காட்சிகளாக ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக கேபிள் டிவியில் உள்ளூர் தொலைக்காட்சி இன்று முதல் ஒளிபரப்ப இயலாது என அரசு கேபிள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

Government Cable TV has announced that local TV will stop broadcasting from today KAK
Author
First Published Dec 1, 2023, 11:18 AM IST

கேபிள் டிவி ஒளிபரப்பு கட்டுப்பாடு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கேபிள் டிவிகளில் உள்ளூர் தொலைக்காட்சியானது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த உள்ளூர் தொலைக்காட்சியில் தங்கள் பகுதி விளம்பரங்களை வெளியிட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர். அதே போல தங்கள் நிறுவனத்தை பிரபலப்படுத்த உள்ளூர் தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தநிலையில் உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்புவது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புதுறை அமைச்சர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

கேபிள் டிவி ஒளிப்பரப்பு மேற்கொள்ளும் அனைத்து MSO களும் டிசம்பர் 1 முதல் சில நடைமுறைகளை தெரிவித்துள்ளது. கேபிள் டிவி ஒளிப்பரப்பு மேற்கொள்ளும் அனைத்து MSOகளும் ஒளிப்பரப்பப்படும் மொத்த சேனல்களின் எண்ணிக்கையில் 5% சேனல்களை மட்டுமே மாநில அளவிலான உள்ளூர் தொலைக்காட்சிகளாக ஒளிப்பரப்பு செய்ய வேண்டும்.

Government Cable TV has announced that local TV will stop broadcasting from today KAK

இன்று முதல் ஒளிபரப்பு நிறுத்தம்

கேபிள் டிவி ஒளிப்பரப்பை மேற்கொள்ளும் அனைத்து MSOகளும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு மாவட்ட அளவில் உள்ளூர் தொலைக்காட்சிகள் மட்டுமே ஒளிப்பரப்பு செய்ய வேண்டும். எனவே உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பு சேவைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளதால் தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான உள்ளூர் தொலைக்காட்சிகளை டிசம்பர் 1ம் தேதி முதல் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக ஒளிபரப்ப இயலாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஒளிப்பரப்பு செய்யப்படும் அனைத்து வகையான உள்ளூர் தொலைக்காட்சிகளும் டிசம்பர் 1ம் தேதி முதல் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி வரன்முறைப்படுத்தப்பட்டு ஒளிப்பரப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

4000 கோடி செலவு செய்ததற்கு 400 படகு வாங்கி மக்களுக்கு கொடுத்திருக்கலாம்.. திமுக அரசை விளாசும் ஜெயக்குமார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios