Asianet News TamilAsianet News Tamil

திருவண்ணாமலை.. நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார் மற்றும் அரசு பேருந்து - பலி எண்ணிக்கை ஏழாக உயர்வு!

Thiruvannamalai Accident : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பக்கிரிபாளையம் புறவழிச் சாலையில், அரசு பேருந்து ஒன்றும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏழு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Government bus and tata sumo car meet with accident near thiruvannamalai 7 died ans
Author
First Published Oct 23, 2023, 11:56 PM IST | Last Updated Oct 23, 2023, 11:56 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் பக்கிரிபாளையம் புறவழிச் சாலைக்கு அருகே உள்ள அந்தநூர்  என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றும், அதே வழியில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டாடா சுமோ ஒன்றும் நேருக்கு நேர் மோதி உள்ளது. இந்த சம்பவத்தில் டாடா சுமோவில் பயணித்த ஏழு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியான சம்பவம் பெரும் சுகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் அந்த காரில் பயணம் செய்த நாலு பேர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் தற்போது செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பெங்களூருவை நோக்கி அந்த கார் பத்துக்கும் அதிகமான நபர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

திடீரென சந்தித்து ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்ட அண்ணாமலை, திருமாவளவன்

இந்நிலையில் பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு திருவண்ணாமலையை நோக்கி அரசு பேருந்து ஒன்றும் வந்து கொண்டிருந்த நிலையில். செங்கம் அருகே இரு வாகனங்களும் நேருக்கு நேர் எதிர் பாராத விதமாக மோதி உள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

இந்த கோர விபத்தில் ஏழு பேர் பலியான நிலையில் தற்போது 14 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து மேல் செங்கம் பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஒரு காரில் பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஏன் பயணித்தார்கள் என்பது குறித்த விசாரணைகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றது. 

சாலையில் அலட்சியமாக வெட்டப்பட்ட புலியமரம்; லாரி மோதியதில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios