கன்னியாகுமரி

“அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் பணி புரியும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் குலசேகரத்தில் போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்ட்டம், குலசேகரம் அரசுமூடு சந்திப்பில் அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு சிஐடியூ தோட்டத் தொழிலாளர் சங்க உதவி பொதுச்செயலர் பி.நடராஜன் தலைமை தாங்கினார்.

இதில், தொழிற்சங்க நிர்வாகிகள் எம்.அண்ணாதுரை, எம்.வல்சகுமார், கே.தங்கமோகன், பி.சிங்காரன், கே.செல்லப்பன், ஜான் இம்மானுவேல், மரிய மிக்கேல், வேலுக்குட்டி, ராகவன், வேலப்பன், ஆபிரகாம், சங்கரன், முகமது அப்துல் காதர், ரோசிலி, சசிதரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

“அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் பணி புரியும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

அரசு ரப்பர் கழகத்தை பாதுகாக்க வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்.

பணி நிரந்தரம் செய்யப்படாத அனைத்துத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தொழிலாளர்களை வன விலங்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

ஆண், பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

இலவச உயர் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.