got god idol at home while digging
கிருஷ்ணகிரி
யாரோ செய்வினை வைத்தாக சந்தேகம் அடைந்து வீட்டின் பின்புறம் குழி தோண்டியதில் நடராசர் உள்ளிட்ட சாமி சிலை கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பூதனூரைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவருடைய குடும்பத்துக்கு யாரோ செய்வினை வைத்துவிட்டனர் என்று சந்தேமடைந்து அவர்கள் சென்னையில் இருந்து சீனிவாசன் என்ற சாமியாரை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து வீட்டில் வழிபாடுகள் நடந்தன. பூஜையின்போது வீட்டின் பின்புறம் குழி தோண்டப்பட்டது. அப்போது அங்கு நடராசர் சிலை, காமாட்சி அம்மன் விளக்கு, பித்தளை பொருட்கள் கிடைத்து. இந்த தகவல் அக்கம்பக்கத்தில் காட்டுத் தீயாய் பரவியது.
இதுகுறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி காவல் ஆய்வாளார் மனோகரன், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், ராஜம்மாள் வீட்டின் பின்புறம் தோண்டப்பட்ட குழியில் நடராஜர் சிலை, காமாட்சி விளக்கு, பித்தளை பொருட்கள் கிடைத்தது தெரியவந்தது. அவற்றை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போச்சம்பள்ளி காவலாளர்கள் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
