கிட்டதட்ட தமிழகத்தில் மட்டுமே 35,000க்கும் மேலான ரேஷன் கடைகள் இருக்கின்றன. இவற்றில் 10,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் பகுதி நேர கடைகளாக செயல்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் நகர்ப்புறங்களில் இணைய சேவை பரவலாக உள்ளது. ஆனால் நகர்ப்புறங்களிலும் மலைப் பகுதிகளிலும் இச்சேவை சரியாகக் கிடைப்பதில்லை. 4ஜி காலத்திலும் பல்வேறு கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களில் கூட மின்சாரம் போன்ற வசதிகள் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புறங்களிலும், மலை பிரதேசங்களிலும் வேகமான இன்டர்நெட் சேவைகளை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வைஃபை வசதியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. கிட்டதட்ட தமிழகத்தில் மட்டுமே 35,000க்கும் மேலான ரேஷன் கடைகள் இருக்கின்றன. இவற்றில் 10,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் பகுதி நேர கடைகளாக செயல்படுகின்றன. இந்த கடைகள் அனைத்திலும் வைஃபை வசதியை கூடிய விரைவில் கொண்டு வர அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !

அரசின் வைஃபை வசதி திட்டம் என்பதால் கட்டணமும் மிக குறைவாக தான் இருக்கும் மற்றும் மக்கள் ரேஷன் கடைகளை இணைய சேவை மையமாக கூட பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசின் இந்த வைஃபை வசதி திட்டத்தின் மூலமாக ரேஷன் கடைகளுக்கும் வருமானம் கிடைக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. "தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை
