gold rate increased

சவரன் 23 ஆயிரத்தை தாண்டியது...! ஒரே நாளில் ரூ.392 உயர்வு..!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பொதுவாக ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று தங்கத்தின் மீதானவர்த்தகம் அதிகரித்து உள்ளதால் தங்கம் விலைஏற்றம் கண்டு வருகிறது.

இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்

22 கேரட் தங்கம்

22கேரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 49 ரூபாய் உயர்ந்து 2ஆயிரத்து 881 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ.392 ரூபாய் உயர்ந்து 23 ஆயிரத்து 48 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் உயர்ந்து 43 ரூபாய் 40 பைசாவிற்கு விற்கப்படுகிறது