நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்... தங்கத்தின் விலை திடீர் சரிவு- ஒரு கிராமுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா.?
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 160 ரூபாய் ரூபாய் குறைந்துள்ளது. இதன் காரணமாக நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உச்சத்தில் தங்கத்தின் மதிப்பு
பொன்னிலும், நிலத்திலும் முதலீடு செய்ய வேண்டும் என பெரியவர்கள் கூறுவார்கள். அதற்கு ஏற்றபடி தங்கத்தின் விலையானது கடந்த சில வருடங்களாக உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக தங்கத்தை சாதாரண மக்களால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் திருமணத்திற்கு சேமிப்பாக தற்போதே பல நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்கி சேமித்தும் வருகின்றனர். மேலும் இந்திய மக்களிடம் தங்கத்தின் மீதான ஆர்வம் எப்போதும் குறையாது. அதன் காரணமாகவே இந்தியாவில் தங்கத்தின் மீதான மதிப்பும் உச்சத்தில் இருந்து வருகிறது.
தங்கத்தின் விலை குறைந்தது
இந்தநிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையானது சற்று குறைந்துள்ளது. நேற்று தங்கம் ஒரு கிராம் 5ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது. இதே போல 8 கிராம் மதிப்புள்ள தங்கம் நேற்று 46ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்க்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 46ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. மினிமம் பேலன்ஸ் செலுத்த தேவையில்லை.. ஆர்பிஐ கொடுத்த அப்டேட்..