Gold ornament teft in thrivannamalai marraige house

ஆரணிஅருகேஅதிமுகபிரமுகர்இல்லத்திருமணவிழாவில் 110 சவரன்தங்கநகைகள்கொள்ளையடிக்கப்பட்டசம்பவம்பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அரையாளம் கிராமத்தை சேர்ந்த எம்.வேலு, மேற்கு ஆரணி அதிமுக ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகின்றார். இவரின் மகளுக்கு ஆரணி புறவழிசாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு மணமகனின் சகோதரிகள் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தங்களது நகைகளை வைத்துள்ளனர். 

இதனிடையே மர்ம நபர் அந்த அறையின் பின் பக்க ஜன்னலின் தாழ்பாளை நீக்கி அங்கு இருந்த 110 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றுவிட்டார்.

மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களும் வேறு கோணங்களில் திருப்பி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்யாண மண்டபத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சுற்றித்திரிந்ததால், அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.