மார்ச் 31 ம் தேதிக்குள் 14.40 லட்சம் பேரின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 5 சவரனுக்குட்ப்பட்ட நகைகள்  திருப்பித்தரப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

நகைக்கடன் தள்ளுபடி:

மார்ச் 31 ம் தேதிக்குள் 14.40 லட்சம் பேரின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 5 சவரனுக்குட்ப்பட்ட நகைகள் திருப்பித்தரப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் அனைத்தும் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஆட்சி அரியணை ஏறியவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, பல்வேறு வழிக்காட்டுதல் அடிப்படையில் நகைகடன் தள்ளுபடி செய்வதற்கு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் தயார்செய்யப்பட்டது. மேலும் தகுதியான 13 லட்சம் பயனாளிகளுக்கு கூட்டுறவு வங்கியில் நகைகடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தார்.

இந்நிலையில் அரசு நிர்ணயித்த தகுதி அடிப்படையில் பயனாளிகளின் நகைக்கடனை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வந்தது. மேலும் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் போலி மற்றும் நகையே இல்லாமல் வங்கிக் கடன் பெற்றிருப்பது கண்டறியப்பட்டு, அவற்றின் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவற்றின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான 13 லட்சம் பயனாளிகள் பட்டியலை கூட்டுறவுத் துறை தயாரித்து, அவற்றின் மீது சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிறப்பு தணிக்கை:

இந்நிலையில், சிறப்பு தணிக்கை மீது, மீண்டும் தணிக்கை நடத்த கூட்டுறவு தணிக்கை இயக்குநர் அண்மையில் அறிவுறுத்தினார். பொது நகை கடன் தள்ளுபடி தொடர்பாக சிறப்பு தணிக்கை முடிக்கப்பட்ட வங்கி மற்றும் சங்கங்களில், மண்டல அளவில் கூடுதல் இயக்குநர், இணை, துணை இயக்குநர்கள், சரக கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர்கள், அந்தந்த மண்டலங்கள், சரகங்களில் சோதனை தணிக்கையை தனித்தனியாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

மேலும் படிக்க: தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி.. அடுத்த நொடியே தண்டவாளத்தில் தலைமை வைத்த கணவர்.. இறுதியில் நடந்தது என்ன?

மேலும் முதற்கட்டமாக, நகர கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் 2-ம் கட்டமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இதர சங்கங்களில் சோதனை மேற்கொண்டு,சோதனை நடத்திய கூட்டுறவு நிறுவனத்தை மீண்டும் பிற அலுவலர் சரிபார்க்கக் கூடாது என்று விளக்கப்பட்டது. இந்த சோதனையை மார்ச் 17-ம் தேதிக்குள் முடித்து அறிக்கை அளிக்கமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அமைச்சர் தகவல்:

இந்நிலையில் தமிழகத்தில் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் அறிவிக்கப்பட்ட தங்க நகைக் கடன் தள்ளுப்படி திட்டத்தின் கீழ், தகுதி உள்ள நபர்களுக்கு வரும் மார்ச் 31 ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 5 சவரனுக்குட்ப்பட்ட நகைகள் திருப்பித்தரப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறவுள்ள நபர் யாரேனும் விடுப்பட்டிருந்தால், அவர்கள் வங்கியில் விண்ணப்பித்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார். 

மேலும் படிக்க: TN Agri Budget 2022: டிஜிட்டல் விவசாயம்; விவசாயிகளை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தும் 10 அம்சங்கள் :முழுவிவரம்