வெள்ள நிவாரணத் தொகை ரூ.6000 போதாது... 15000 ரூபாயாக உயர்த்தி கொடுங்க- ஜி கே வாசன்

தமிழக அரசால் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை போதுமானதல்ல என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெ,ரிவித்துள்ளார்.

GK Vasan has demanded that the compensation announced for the Chennai floods should be increased KAK

சென்னையை புரட்டி போட்ட வெள்ளம்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு சென்னையின் பல்வேறு பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியது. இதனையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு சார்பாக நிவாரண உதவி அறிவிக்கப்பட்டதுள்ளது. அந்த வகையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்திற்கு 6ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் மனித உயிரிழப்பு, கால் நடைஉயிரிழப்பு, வீடுகள் படகுகள் மற்றும் வலைகள் சேத்த்திற்கு இழப்பீடு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் போதுமானதாக இல்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டும்.

GK Vasan has demanded that the compensation announced for the Chennai floods should be increased KAK

இழப்பீடு தொகை அதிகரித்து கொடுங்கள்

தமிழக அரசு பல்வேறு நிவாரணங்களை அறிவித்து இருக்கிறது. இந்நிலையில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து கட்டில் மெத்தை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு பழுதடைந்துள்ளது. அவற்றிற்கான இழப்பீடு எதுவும் அறிவிக்க வில்லை. அவற்றை கணக்கீட்டு இழப்பீடு வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட இறவைப் பாசன பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000 அறிவித்துள்ளது போதுமானது இல்லை. ஒரு ஏக்கர் பயிரிடுவதற்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் செலவாகிறது. ஆகவே ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். ஹெக்டேர் அளவில் கணகிட்டு அறிவித்து இருப்பது விவசாயிகளை மறைமுகமாக ஏமாற்றும் விதமாக அமைந்திருக்கிறது.

GK Vasan has demanded that the compensation announced for the Chennai floods should be increased KAK

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு

மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் அவர்கள் குடும்பங்களின் எதிர்கால நலன் கருதி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதோடு அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மீனவர்களின் மீன்பிடி வலைகளுக்கு குறைந்த பட்சம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

வழங்கப்படும் நிவாரணங்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் முழுயைாக சென்றடையும் வகையில் வழங்க வேண்டும். இதில் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினரின் குறிக்கீடு இல்லாமல் முழுமையாக வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்வதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை மட்டும் கொடுத்தால் போதுமா? கொள்ளையடித்த தொகையை கொடுக்க சொல்லுங்க-சீறும் இபிஎஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios