ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை மட்டும் கொடுத்தால் போதுமா? கொள்ளையடித்த தொகையை கொடுக்க சொல்லுங்க-சீறும் இபிஎஸ்
வானிலை ஆய்வு மையம் ஒரு வார காலத்திற்கு முன்பே கடும் மழை பொழியும் என்று சொல்லியும் அரசு அதில் அலட்சியம் காட்டியதாலயே வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது இதற்கெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு தக்கப் பாடம் புகட்டுவார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்
சென்னை திருவொற்றியூர் ராஜாஜி நகரில் மிக் ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகள் வழங்கினார் .பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பருவமழையை திமுக அரசு முறையாக கையாளவில்லை எனவும், திறமையற்ற முதலமைச்சர் ஆள்வதால் மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக கூறினார். சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என அமைச்சர் மா சுப்பிரமணியம் சொன்னார். ஆனால் இந்த மழையில் சென்னையே வெள்ளத்தில் மிதந்தது. பொய் பேசுகிறவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் முதலமைச்சருக்கும், அமைச்சர் மா சுப்பிரமணியன் இருவருக்கும் தான் கொடுக்க வேண்டும் என கூறினார்.
தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்
உள்ளாட்சி துறை அமைச்சர் சென்னை மழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை விட்டுவிட்டு, சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞர் அணி மாநாட்டு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தினார். வெள்ள நீர் தடுப்பு நடவடிக்கைக்காக அதிமுக ஆட்சியில் மூன்று திட்டங்கள் தொடங்கப்பட்ட முதற்கட்ட பணிகள் நடத்தப்பட்டதாகவும், ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் திமுக அரசு அதனை நிறைவேற்றி இருந்தாலே பிரச்சனை இருந்திருக்காது ஆனால் ஆட்சியாளர்கள் கலெக்ஷன் கரப்ஷனில் அக்கறை செலுத்தியதால் மக்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
வானிலை ஆய்வு மையம் ஒரு வார காலத்திற்கு முன்பே கடும் மழை பொழியும் என்று சொல்லியும் அரசு அதில் அலட்சியம் காட்டியதாலயே வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது இதற்கெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு தக்கப் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
Tamilnadu Heavy Rain: இந்த 16 மாவட்டங்களில் வச்சு செய்யப்போகுதாம் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!