என்னது... தகுதி உள்ளவங்களுக்கு மட்டுமா? அனைத்து மகளிருக்கும் ரூ.29,000 கொடுங்க! அண்ணாமலை அதிரடி

தமிழக அரசு அனைத்து பெண்களுக்கும் 28 மாத நிலுவையையும் சேர்ந்து 29,000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்கிறார்.

Give Rs 29,000 for all women say TN BJP leader Annamalai after TN Budget announcement of Rs 1000 financial aid for women

தமிழக அரசின் உரிமைத்தொகையை தகுதியுடைய பெண்களுக்குத்தான் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறி மடைமாற்றம் செய்யக்கூடாது என்றும் அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் உரிமைத்தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்களிக்கப்பட்டது. அதன்படி அந்தத் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் செயல்படுத்தப்படும் என இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த அறிவிப்பைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, உரிமைத்தொகையை ஆயிரம் ரூபாயக்குப் பதிலாக 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்றும்  தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

"ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து, "தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்." என்றும் அண்ணாமலை தன் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios