தனிமையில் இருப்பதாக ஃபேஸ்புக் நண்பருக்கு தகவல் கொடுத்து வரவழைத்த பெண்; பணம், செல்போனை பிடிங்கிக் கொண்டு விரட்டியடிப்பு...

கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் தனிமையில் இருப்பதாக ஃபேஸ்புக் நண்பருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். அவரை மிரட்டி அவரிடமிருந்து ரூ.83 ஆயிரம் மற்றும் செல்போனை பிடிங்கிக் கொண்டு விரட்டியடித்து உள்ளார். அப்பெண் குறித்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

girl texted her Facebook friend being lonely Money cellphone chopped...

கன்னியாகுமரி

கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் தனிமையில் இருப்பதாக ஃபேஸ்புக் நண்பருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். அவரை மிரட்டி அவரிடமிருந்து ரூ.83 ஆயிரம் மற்றும் செல்போனை பிடிங்கிக் கொண்டு விரட்டியடித்து உள்ளார். அப்பெண் குறித்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

kanyakumari name க்கான பட முடிவு

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, வசந்தபுரத்தில் வசிப்பவர் தனசேகரன். நகலகம் (ஜெராக்ஸ்) கடை நடத்திவரும் இவருக்கு ஃபேஸ்புக்கில் பெண் ஒருவர் நண்பரானார். இருவரும் நன்றாக பேசிப் பழகி வந்தனர். 

இருவரும் தங்களுடைய தகவல்களை பரிமாறிக் கொண்டனர். அப்பெண் தான் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் வசிப்பதாகவும் தனது கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். நான் தனியாக வசித்து வருகிறேன் என்றும் கூறி தனசேகரனுக்கு ஆசைவார்த்தைக் காட்டியுள்ளார்.

facebook க்கான பட முடிவு

இந்த நிலையில் அப்பெண்ணைப் பார்க்க தனசேகரன் நாகர்கோயிலுக்குச் சென்றார். அப்போது தனசேகரனிடம், "தன்னால் வர முடியவில்லை" என்றும் "தன்னுடைய தம்பியை அனுப்பி வைக்கிறேன். அவருடன் வீட்டுக்கு வந்துவிடுங்கள்" என்று அப்பெண் கூறியுள்ளார். 

அதன்படியே, தனசேகரன் இருக்கும் இடத்திற்கு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் தனசேகரனை சந்தித்தார். அவருடன் தனசேகரனும், தான் முகநூலில் பழகிய தோழியை சந்திக்கப் புறப்பட்டார். 

தொடர்புடைய படம்

தனசேகரனை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞர் அவரை மிரட்டி ஏ.டி.எம். கார்டு, இரகசிய எண் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டார். பின்னர் அவரது கணக்கில் இருந்து ரூ.83 ஆயிரத்து 500-ஐ எடுத்து கொண்டார். பின்னர், தனசேகரனை அங்கேயே விட்டுவிட்டு அந்த இளைஞர் அங்கிருந்து சென்றுவிட்டார். 

பின்னர், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த தனசேகரன் வடச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். 

police investigation க்கான பட முடிவு

தனசேகரனுடன் ஃபேஸ்புக்கில் பழகியவர் உண்மையிலேயே பெண் தானா? அல்லது ஏ.டி.எம்.கார்டு, செல்போனை பறித்தவர் தான் போலி கணக்கு மூலம் தனசேகரனுடன் பழகினாரா? என்று காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பேசிய பெண்ணின் இரண்டு செல்போன் எண்களை காவலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றை வைத்து அப்பெண்ணை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவலாளர்கள் இறங்கியுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios