Asianet News TamilAsianet News Tamil

தமிழக தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

girija vaithyanthan-new-sectretery
Author
First Published Dec 22, 2016, 12:01 PM IST


தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதில் அவர் வீட்டில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் ஏராளமான ஆவணங்கள், சிடிக்கள், லேப்டாப்,முதலியவை கைப்பற்றப்பட்டது.

பணம் தங்க நகைகள் பற்றிய கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

girija vaithyanthan-new-sectretery

ராம மோகன் ராவ் தவிர அவரது மகன் ,மைத்துனர், சம்மந்தி ஆகியோரின் வீடுகள் நிறுவனங்கள் உட்பட 14 இடங்களில் ரெய்டு நடந்தது.

இதில் பல லட்ச ருபாய் கருப்பு பணம் கிலோ கணக்கில் தங்கம், சொத்து ஆவணங்கள் சிக்கின.

ராம் மோகன் ராவ் - சேகர் ரெட்டி தொடர்பான பல ஆதாரங்களை வருமான வரித்துறையினர் எடுத்துள்ளனர்.

girija vaithyanthan-new-sectretery

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக தலைமை செயலகத்தில் புகுந்து வருமனவரிதுறையினர் சோதனை நடத்தியது இந்தியாவெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

girija vaithyanthan-new-sectretery

தமிழகத்துக்கே தலைகுனிவு என்று அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்தனர்.

இதையடுத்து தலைமை செயலாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது.

girija vaithyanthan-new-sectretery

தலைமை செயலாளர் பதவிக்கு தகுதியான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நிதித்துறை சண்முகம், நில நிர்வாகத்துறை ஆணையர் கிரிஜா வைத்யநாதன், வணிகவரித்துறை ஆணையர் சந்திரமவுலி ஆகியோர் பெயர் அடிபட்டது.

girija vaithyanthan-new-sectretery

இந்நிலையில் சற்று நேரத்துக்கு முன் தமிழக அரசின் தலைமை செயலாளராக கிரிஜா வைத்யநாதன் நியமிக்கபட்டார்

Follow Us:
Download App:
  • android
  • ios