girija vaithyanathan urgent meeting with secreteries
தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் , அணைத்து துறை செயலாளர்களுடன் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது குறித்தும், டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மெரினாவில் லட்சகணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தியதில் ஒரு சில வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது.

அதுபோல மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது குறித்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுமா என்றும் போராட்டம் நடத்தினால் போராட்டக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து விரிவான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் மாநில திட்ட செயலாக்கம், நிதி பகிர்வு குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
