உ.பியில் ஹலால் சான்றிதழுக்கு தடை.! நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-ஜி.ஜி. சிவா
மாட்டை வைத்து மனிதனை அடித்து துன்புறுத்தி அரசியல் செய்யும் இந்த கோமாளி கூட்டங்களுக்கு வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டி இந்தியா கூட்டணிக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அள்ளிக் கொடுப்பார்கள் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் கிடையாது என ஜி ஜி சிவா தெரிவித்துள்ளார்.
ஹலால் உணவுக்கு தடை
உத்தரபிரதேசத்தில் ஹலால் சான்றிதழுக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,தேசிய முன்னேற்ற கழகம் நிறுவன தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், இஸ்லாமியர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கு சென்று திட்டமிட்டு மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று சொல்லி அடித்து சாகடிப்பதும் மதவெறி தலைக்கு ஏறி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லவில்லை என்றால் இஸ்லாமியர்களை முட்டி போட வைத்து அடித்து துன்புறுத்தும் காணொளிகளையும் சமூகவலைத்தளங்கள் மூலமாக நாம் பார்த்திருக்கிறோம் .
மாட்டுக்கறி ஏற்றுமதிக்கு கண்டனம்
இந்து என்கின்ற வார்த்தையை வைத்துக் கொண்டு ஜனநாயக இந்திய நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி பல கலவரத்தை ஏற்படுத்தி குளிர் காய்ந்து வரும் சங்பரி வார சங்கங்கள் தான் நாட்டிலேயே அதிக அளவில் மாட்டுக்கறி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்திருப்பதில் உத்திர பிரதேசம் மாநிலம் முதல் இடமாக உள்ளது என்று ஆய்வுகள் சொல்லுகிறது. மாட்டை வைத்து மனிதனை அடித்து துன்புறுத்தி அரசியல் செய்யும் இந்த கோமாளி கூட்டங்களுக்கு வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டி இந்தியா கூட்டணிக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அள்ளிக் கொடுப்பார்கள் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் கிடையாது.
பாஜகவின் இரட்டை நிலைப்பாடு
பெரும் கார்ப்ரேட் முதலாளிகளுக்கு லட்சக்கணக்கான கோடிக்கணக்கான வங்கி கடன்கள் தள்ளுபடி செய்வதும் அரசு துறைகளை தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கும் அவல நிலைகளும் பெட்ரோல் டீசல் கேஸ் என்று வின்னை மட்டும் அளவில் விலைவாசி ஏற்றமும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். பாஜகவின் மக்கள் விரோதே போக்கை. இப்பேற்பட்ட நிலையில் தான் இஸ்லாமியர்களுக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி அரசு ஹலால் சான்றிதழ்க்கு தடை விதித்திருக்கிறது ஆகவே இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது பாஜக வின் இரட்டை நிலைப்பாட்டை தேசிய முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது என ஜ.ஜி. சிவா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்