விழுப்புரம் மாவட்டத்தில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது? இந்த கண்காட்சி எத்தனை நாள் நடக்கும்? என்னென்ன புத்தகங்கள்? உள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.
Villupuram District Book Festival: விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் (பபாசி) ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாவது ஆண்டு புத்தகத் திருவிழா மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நகராட்சித் திடல் பகுதியில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில், விழுப்பும் மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மூன்றாவது புத்தகத் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
விழுப்புத்தில் புத்தக கண்காட்சி
தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி புத்தகத் திருவிழவை தொடங்கி வைத்தார். எம்.பி ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் விழுப்புரம் இரா. லட்சுமணன், விக்கிரவாண்டி அன்னியூர் அ.சிவா, உளுந்தூர்பேட்டை ஏ.ஜெ. மணிக்கண்ணன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் (பபாசி) ஆகியவை இணைந்து இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகின்றன. மார்ச் 2ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா மார்ச் 12ஆம் தேதி வரை நகராட்சித் திடல் பகுதியில் நடைபெறவுள்ளது. இதற்காக 50க்கும் மேற்பட்ட பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி தட்டச்சர் பணிக்கான சிறப்பு போட்டித் தேர்வு முடிவுகள் வெளியீடு
ஆயிரக்கணக்கான புத்தகங்கள்
விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் கலை, இலக்கியம், புதினம், நாவல் என பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு நாளும் அங்கு நடைபெறும் விழாவில் பல்வேறு தலைப்புகளில் ஆளுமைகள் பேசுகின்றனர். முன்னதாக புத்தக திருவிழா தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, ''புத்தக கண்காட்சி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்த்தை உருவாக்கும். புத்தக வாசிப்பின் மூலம் மனதில் சீர்திருத்த கருத்துக்கள் தோன்றி சிறந்ததொரு சமூகம் அமையும்.
புத்தகங்கள் படிக்கும்போது, மனம் ஒருநிலைபடுவதால், உடல் நலனும் பாதுகாக்கப்படும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் தினசரி நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். அப்போது தான், உலகளாவிய அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடியும். போட்டி தேர்வுக்கு தயாராவோர் இந்த புத்தக கண்காட்சியை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.
இது வெறும் ட்ரெய்லர் தான்! இனிமே தான் வெயின் ஆட்டமே இருக்காம்! ஆனாலும் ட்விஸ்ட் வைத்த வானிலை!
