டிஎன்பிஎஸ்சி தட்டச்சர் பணிக்கான சிறப்பு போட்டித் தேர்வு முடிவுகள் வெளியீடு
TNPSC Special Competitive Exam Result 2025: டிஎன்பிஎஸ்சி நடத்திய தட்டச்சர் பணிக்கான சிறப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்காலிக ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.

TNPSC Special Competitive Exam Result 2025
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தட்டச்சர் பணிக்கான சிறப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்வை எழுதியவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளைப் பார்த்துக்கொள்ளலாம்.
TNPSC Typist Exam 2025
தமிழ்நாடு அமைச்சுப் பணியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தட்டச்சு பணியில் தற்காலிக ஊழியர்களாக தொடர்பவர்களுக்கு மட்டும் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சிறப்புத் தேர்வு அறிவிக்கப்பட்டது.
TNPSC Result 2025
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் தற்காலிகமாகப் பணியில் சேர்ந்து தற்போதும் பணியில் நீடிக்கும் தற்காலிக தட்டச்சுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக சிறப்புத் தேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி காலியாக உள்ள 50 தட்டச்சர் பணியிடங்களுக்கு இந்தச் சிறப்பு தேர்வு நடைபெற்றது. நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பிப்ரவரி 8ஆம் தேதி தேர்வு நடைபெற்றது.
TNPSC Special Competitive Exam 2025
இத்தேர்வை எழுதியவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்றால், முகப்பு பக்கத்தில் உள்ள சமீபத்திய அறிவிப்புகள் பகுதியில் தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பைக் காணலாம். அந்த இணைப்பை கிளிக் செய்து தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள பக்கம் திறக்கும். அதில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறியலாம்.
TNPSC Exam Results 2025
குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, அரசு தொழில்நுப்டத் தேர்வில் தட்டச்சு தேர்ச்சியும் பெற்றவர்கள் மட்டும் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். 10ஆம் வகுப்பு பாடப் புத்தகத் தரத்தில் கணினி மூலமாக இத்தேர்வு நடத்தப்பட்டது. 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இத்தேர்வின் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியவர்கள் தங்கள் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம். இறுதி தரவரிசை எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இருக்கும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.