சாக்கடையிலிருந்து குழந்தையை காப்பாற்றிய கீதா யார் தெரியுமா..? 

சென்னை வளசரவாக்கத்தில் நேற்று சாக்கடையில் இருந்து பிறந்து அரை மணி நேரமான குழந்தயை தொப்புள் கொடியுடன் மீட்டு எடுத்த கீதா ஒரு சின்னத்திரை நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. 

வளசரவாக்கம் எஸ்.வி. எஸ். நகர் 6-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் கீதா வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று, குடியிருப்பு முன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தை அழுதபடி இருந்துள்ளது.

இதனை கவனித்த பால் போடும் நபர், கீதாவிடம் தெரிவிக்க ஓடோடி கீழே வந்த கீதா, சாக்கடை  கால்வாயில் இருந்து குழந்தை அழும் சப்தத்தை உணர்ந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கீதா சிரமம் பார்க்காமல், தரையில் படுத்தப்படி, கால்வாயில் இருந்த  குழந்தையை மீட்டு எடுத்தார்.

குழந்தையின் கழுத்தில் அதன் தொப்புள் கொடி சுற்றியபடி இருந்தது. உடனடியாக அந்த குழந்தைக்கு  முதலுதவி செய்து, சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் அதற்கு ‘சுதந்திரம்’ என்று நடிகை கீதாவும், பொது மக்களும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பின்னர் அந்த குழந்தையை, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. 

இந்த குழந்தையை மீட்ட கீதாவிற்கு ஒரு திருமண மான பெண் உள்ளார். அவருக்கு கடந்த 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் தற்போது கால்வாயில் கிடைத்துள்ள குழந்தயை கொடுத்தால் தாங்களே வளர்த்துக்கொள்ள தயாராக உள்ளோம் என அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் தான் ஒரு சீரியல் நடிகை என்றும் தற்போது வாய்ப்பு கிடைக்காமல், வீட்டில் இருப்பதாகவும்  தெரிவித்து உள்ளார் கீதா. இவருடைய இந்த நல்ல செயல் மூலம் அவருக்கு இனி நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.