சேலம்

புதிதாக வாங்கிய கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தாய், மகன் மற்றும் கேஸ் சிலிண்டர் ஊழியர் என மூவரும் பலத்த காயம் அடைந்தனர். இதனால் அக்கம்பக்கத்தினர் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

salem district க்கான பட முடிவு

சேலம் மாவட்டம், வாழப்பாடி, கிழக்குகாட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம்.  விவசாயியான இவருக்கு சாந்தி (45) என்ற மனைவி உள்ளார்.  இவர்கள் தங்களது வீட்டிற்கு புதிதாக சமையல் எரிவாயு (கேஸ் சிலிண்டர்) இணைப்பைப் பெற்றுள்ளனர்.

கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவது பற்றிய போதிய பயிற்சி சாந்திக்கு இல்லை. இந்த நிலையில் நேற்று மாலை சிலிண்டரைத் திறந்துவிட்டு அடுப்பை பற்றவைக்க முயற்சித்துள்ளார் சாந்தி. ஆனால், அடுப்பு பற்றவிலை. இதனால் என்ன செய்வதென்று தெரியாத சாந்தி கேஸை அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டுள்ளார். இதனால்  வீடு முழுவதும் கேஸ் பரவியிருந்துள்ளது. 

தொடர்புடைய படம்

உதவிக்காக வெளியே வந்த சாந்தி, கேஸ் சிலிண்டர் முகவரகத்தில் பணிபுரியும் ஊழியரான ரமேஷிடம் உதவி கேட்டார்.  ரமேஷும், சாந்தியின் வீட்டுக்கு சென்றார். அப்போது சாந்தி மின்விளக்கின் சுவிட்சை தட்டினார். அப்போது வீட்டுக்குள் பரவியிருந்த கேஸ் பற்றி வீடு முழுவதும் பரவியது.

இதில் சாந்தி,  அவரது மகன் தினேஷ்குமார், ஊழியர் ரமேஷ் ஆகிய மூவரும் பலத்தகாயம் அடைந்தனர்.  இவர்கள் மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மூவரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய படம்

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர். கேஸ் சிலிண்டர் வெடித்து மூவர் பலத்த காயம் அடைந்த சம்பவம் இந்தப் பகுதியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.