Asianet News TamilAsianet News Tamil

கேரளாவுக்கு கடத்த முயன்ற 365 கிலோ கஞ்சா பறிமுதல்... 2 பேர் கைது

ganga smugglers-arrested
Author
First Published Oct 6, 2016, 5:03 AM IST


ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு தேனி வழியாக கடத்த முயன்ற ரூ.45 லட்சம் மதிப்புள்ள 365 கிலோ கஞ்சா போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திராவில் இருந்து தேனி வழியாக கேரளாவிற்கு போதைப்பொருள் கடத்த உள்ளதாக போதைப்பொருள் நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, போதைப்பொருள் நுண்ணறிவு துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஆய்வாளர் அழகர் ஆகியோர் தலைமையில் போலீசார் தேனி மாவட்டம் சுப்பிரமணிய கோயில் அருகே நின்றிருந்த லாரியை சோதனை இட்டனர்.

பின்னர், லாரியில் இருந்த 365 கிலோ கஞ்சா போதைப்பொருளை தேனி போதைப்பொருள் நுண்ணறிவு போலீசார் கைப்பற்றினர். மேலும், இது குறித்து தேனி மாவட்ட நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா கடத்திய உசிலம்பட்டியைச் சேர்ந்த மன்மதன் (41) மற்றும் கம்பத்தைச் சேர்ந்த ஓட்டநர் மணி (37) ஆகியோரை போலீசர் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.45 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios