புதுக்கோட்டை மாவட்டத்தில், கஜா புயலால் பெரிதளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கு சாய்ந்து கிடந்த மரங்களை அகற்றியும், மின் கம்பங்களை நிற்க வைத்தும் பழுது பார்த்து மின்சாரம் இணைப்பு வரை இரவு பகலாக வேலை செய்து வந்து, தற்போது அந்த ஊரில் மின் இணைப்பு கிடைத்து விட்டது.

அந்த வகையில் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஊர்பொதுமக்கள் சார்பில் இரவு, பகலாக உழைத்த மின்சார வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து உள்ளனர்.

மேலும், 40 மின் ஊழியர்கள் சேலத்தில் இருந்து வந்து, பாதிக்கப்பட்ட அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். மேலும் உணவு அருந்தவும், இரவு நேர தூக்கத்திற்கு மட்டுமே அந்த மண்டபத்திற்கு ஊழியர்கள் செல்வார்கள். இப்படியுமாக கடந்த ஐந்து நாட்களாக இரவு பகல் பார்க்காமல் மக்களுக்காக மாடாய் உழைத்த ஊழியர்களை மகிழ்ச்சி படுத்த வேண்டும் என்பதற்காக அந்த  ஊர் மக்கள் மற்றம் இளைஞர்கள் ஒன்று கூடி ஒரு வேலையாவது பிரியாணி செய்து தர வேண்டும் என  நினைத்தனர். அதன்படியே ஊழியர்களுக்கு மனதார பிரியாணி வழங்கி மன நிறைவு அடைந்துள்ளனர் அந்த ஊர் பொதுமக்கள்.