நாமக்கல்
 
நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது என்று ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்தார்.

ஆட்சியர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அறிவித்தது மட்டுமின்றி இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட துணிப்பைகளை வெளியிட்டார். அதனை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி பெற்றுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் வருவாய்த்துறை, சுற்றுச்சூழல் துறை, உணவு பாதுகாப்புத் துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள் என அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.