இனி தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி இலவசம்; தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்
தமிழகத்தில் இனி சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி வழங்கும் வகையில் விரைவில் புதிய திட்டம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைகளுக்கு முதல் மாதத்தில் இருந்து செலுத்தப்படும் தடுப்பூசிகள் அரசு மருத்துவ மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் தனியார் மருத்துவமனைகளில் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பாஜக.வில் மத்திய அமைச்சர்கள் கூட அச்சத்தில் தான் உள்ளனர் - மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு
தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தவணை தடுப்பூசிகள் கூடுதல் விலை வைத்து செலுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் பிறந்த குழந்தை 18 வயது வரை மொத்தமாக 16 தவணை தடுப்பூசியை இனி குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவசமாக செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ரத்து; பதவியை காப்பாற்றிக் கொண்ட மகாலட்சுமி
இதன் மூலம் இனி குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் எந்தவிதமான கட்டணமும் இன்றி தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாகும். இதுகுறித்தான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும், விரைவில் இந்த திட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தொடங்கி வைக்க உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.