தாமரை வியூகம் உடைத்தெறியப்படும்; அச்சத்தில் ஒன்றிய அமைச்சர்கள்: மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு!!
பாஜக.வில் மத்திய அமைச்சர்கள் கூட அச்சத்தில் தான் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதிநிலை அறிக்கையை கடந்த 23ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீது எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பாஜக தங்கள் கட்சியில் ஒருவரை மட்டுமே பிரதமராக அறிவிக்கிறது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங் கூட பிரதமராக நினைத்தால் அவர் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
மத்திய அமைச்சர்கள் மத்தியில் ஒருவித அச்சம் உள்ளது. இந்த அச்சம் நாடு முழுவதும் பரவி உள்ளது. விவசாயிகளுக்கான குறைந்தபட் ஆதார விலைக்கு தற்போது வரை அனுமதி வழங்கப்படாதது ஏன்? நாடாளுமன்றத்திற்குள் விவசாயிகளை அனுமதிக்காதது ஏன்? இளைஞர்கள் அக்னிவீர் திட்டத்தில் சிக்கியுள்ளனர், மகாபாரதத்தில் அபிமன்யூ சக்கர வியூகத்தில் சிக்கியது போல நாடும் தாமரை வியூகத்தில் சிககி உள்ளது.
காஞ்சிபுரம் மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ரத்து; பதவியை காப்பாற்றிக் கொண்ட மகாலட்சுமி
சக்கர வியூகத்தை துரோணர், அஸ்வத்தாமன் கட்டுப்படுத்தியது போல் மோடி, அமித்ஷா கட்டுப்படுத்துகின்றனர். பாஜகவின் சக்கர வியூகம் பொருளாதாரத்திற்கு நன்மை அளிக்குமா என்பது கேள்விக்குறியே. சக்கர வியூகம் உடைத்தெறியப்படும். மேலும் அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பட்ஜெட்டில் எந்த ஏற்பாடுகளும் இல்லை.
நாடு முழுவதும் நீட் தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி பட்ஜெட்டில் ஒன்றும் சொல்லவில்லை. அரசின் வரியால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு என்ன செய்தீர்கள் என நிர்மலா சீதாராமனை பார்த்து கேள்வி எழுப்பினார்.
அரசின் வரி தீவிரவாதத்தால் இந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி, பணம் மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் தொழில்துறை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும் புதிதாகக் கொண்டு வரப்பட்ட இன்டர்ன்ஷிப் திட்டத்தால் பெரு நிறுவனங்கள் தான் பயன் பெறும் என்றார்.
மேலும் அம்பானி, அதானி என்ற பெயரை சொல்லக் கூடாது என சபாநாயகா கூறியதால் ஏ1, ஏ2 என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, தொலைத்தொடர்பு, துறைமுகனம் போன்றவற்றை அம்பானி, அதானியிடம் கொடுத்திருக்கிறார்கள். தற்போது ரயில்வே துறையையும் சிலரிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.