மெட்ரோ ரயிலில் ஓசியில் பயணிக்கலாம்... அதிரடி இலவச அறிவிப்பு..!

First Published 11, Feb 2019, 11:01 AM IST
free transportation chennai metro train till today night
Highlights

பொதுமக்களை ஈர்க்கும் வகையில் சென்னையில் மெட்ரோ ரயில்களில் இன்று இரவு வரை, பயணிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களை ஈர்க்கும் வகையில் சென்னையில் மெட்ரோ ரயில்களில் இன்று இரவு வரை, பயணிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் பல்வேறு வழித்தடங்களில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பயணம் செய்கின்றனர். அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற காரணத்தால் நடுத்தர மக்கள் பலர் மெட்ரோவில் பயணிக்க மிகுந்த யோசனைக்குள்ளாவர். இந்நிலையில் பயணிகளை கவரும் விதமாக, இன்று இரவு வரை பயணிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என, மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் சேவை முழுமையாக துவங்கியுள்ளதையடுத்து கட்டணத்தையும் குறைத்து அறிவித்துள்ளது மெட்ரோ நிர்வாகம். வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான நீலநிற வழித்தடத்திற்கு அதிபட்சம் 60ரூபாய், சென்டிரல் ரயில்நிலையம் முதல் கோயம்பேடு வழியாக ஆலந்தூர் வரையிலான பச்சை நிற வழித்தடத்திற்கு அதிகபட்சமாக 50ரூபாய் என டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் சேவை முழுமையாக துவங்கியுள்ளதையடுத்து. பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இன்று இரவு வரையில் அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்கள் இலவசமாக மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

loader