free emergency no announced in rk nagar

ஆர் கே நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெரும் நிலையில் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…

ஆர் கே நகரில் மொத்த வாக்காளர்கள் 2லட்சத்து 62ஆயிரத்து 762 பேர் உள்ளனர். அவர்களின் ஆண் வாக்காளர்கள் 1லட்சத்து 28 ஆயிரத்து 305 பேரும் பெண் வாக்காளர்கள் 1லட்சத்து 34 ஆயிரத்து 307 பேரும் முன்றாம் பாலினத்தவர்கள் 150 பேர் உள்ளதாக கூறினார்.

கடந்த 16ம் தேதி வேட்பு மனு தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 13 பேர் மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வரும் 23ம் தேதி மாலையுடன் முடிவடையும் வேட்புமனு தாக்கல் 24ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு சின்னம் வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.

ஆர்கேநகரில் உள்ள மொத்த வாக்கு சாவடிகள் 256ல் 29 சாவடிகள் பதற்றமானவை என்று கண்டுபிடிக்கப்பட்டு அவற்றிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் ஏதேனும் புகார் என்றால் 1800-425-7012 நம்பரில் தொடர்பு கொள்ளலாம் என்று பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.