MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • திமுகவில் சீனியர்களுக்கு சம்மட்டி அடி..! உதயநிதியின் ஸ்கெட்ச்..! அறிவாலயத்தின் 'க்ளீன் ஸ்வீப்' ஆபரேஷன்

திமுகவில் சீனியர்களுக்கு சம்மட்டி அடி..! உதயநிதியின் ஸ்கெட்ச்..! அறிவாலயத்தின் 'க்ளீன் ஸ்வீப்' ஆபரேஷன்

"வயதாகிவிட்டது, இனி ஓய்வெடுங்கள்" என்று சொல்லாமல் சொல்லும் வகையில், முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருக்கும் 'ஜூனியர் கார்டு' திமுகவின் மூத்த தலைவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Mar 21 2026, 03:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இனி ஓய்வெடுங்கள்
Image Credit : Asianet News

இனி ஓய்வெடுங்கள்

தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்திகளாகத் தங்களைக் கருதிக்கொண்டிருக்கும் திமுகவின் 'சீனியர்' அமைச்சர்களுக்கு இப்போது கிலி பிடித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "வயதாகிவிட்டது, இனி ஓய்வெடுங்கள்" என்று சொல்லாமல் சொல்லும் வகையில், முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருக்கும் 'ஜூனியர் கார்டு' திமுகவின் மூத்த தலைவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.

24
அறிவாலயத்தின் 'க்ளீன் ஸ்வீப்' ஆபரேஷன்
Image Credit : tndipr

அறிவாலயத்தின் 'க்ளீன் ஸ்வீப்' ஆபரேஷன்

திமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் மாவட்டங்களில், பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் சீனியர் அமைச்சர்களை ஓரம் கட்டிவிட்டு, துடிப்பான இளைஞர்களைக் கொண்டு வர ஸ்டாலின் ஒரு ரகசியத் திட்டத்தைத் தயார் செய்து வருகிறார். "வெறும் சீனியாரிட்டி இருந்தால் மட்டும் போதாது; இனி வெற்றியைக் கொடுப்பவர்களுக்கே பதவி" என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் வெடித்தபோதே, பல அமைச்சர்களின் நாடித் துடிப்பு எகிறிவிட்டது.

இனி வரப்போகும் தேர்தலில் நீங்கள் எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும், உங்கள் தொகுதியில் நீங்கள் காட்டும் மெஜாரிட்டியே உங்களின் அடுத்தகட்டப் பதவியைத் தீர்மானிக்கும். இந்த 'பெர்ஃபார்மென்ஸ்' பாலிசியால், தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மீண்டும் 'சீட்' கிடைப்பதே குதிரைக்கொம்பாக மாறியுள்ளது.

Related Articles

Related image1
விஜய்யைக் கண்டு மிரளும் எடப்பாடி..! டெல்லிக்கு போட்ட முட்டுக்கட்டை.. அமித் ஷாவின் பிளான்-B..!
34
துரைமுருகன் டார்கெட்? உதயநிதியின் ஸ்கெட்ச்!
Image Credit : Asianet News

துரைமுருகன் டார்கெட்? உதயநிதியின் ஸ்கெட்ச்!

திமுகவின் பொதுச்செயலாளராகவும், கட்சியின் மூத்த முகமாகவும் இருக்கும் துரைமுருகனுக்கே இந்த முறை 'கேரண்டி' இல்லை என்பதுதான் டாப் நியூஸ். காட்பாடியில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டாலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு அமைச்சர் பதவி என்பதில் தலைமை மௌனம் காத்து வருகிறது. இது மறைமுகமாக "நீங்கள் போட்டியிடலாம், ஆனால் அதிகாரப் பீடத்தில் அமர முடியாது" என்கிற சமிக்ஞையைத் துரைமுருகனுக்கு உணர்த்தியுள்ளது.

அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் அமைச்சர் முத்துசாமிக்கும் கல்தா கொடுக்கத் தயாராகிவிட்டது திமுக தலைமை. அவருக்குப் பதிலாக, உதயநிதி ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய 'ஜூனியர்' பிரகாஷை (தற்போதைய எம்.பி) முன்னிலைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. உதயநிதியின் பரிந்துரையால்தான் அவருக்கு எம்.பி சீட் தரப்பட்டது என்பதும், இப்போது முத்துசாமியின் செல்வாக்கை உடைக்க அவர் பயன்படுத்தப்படுகிறார் என்பதும் ஊர் அறிந்த ரகசியம்.

44
உதயநிதியின் சீனியர்களுக்கு முடிவுரை
Image Credit : X

உதயநிதியின் சீனியர்களுக்கு முடிவுரை

இந்த அதிரடி மாற்றங்களுக்குப் பின்னால் உதயநிதி ஸ்டாலினின் 'யுவ சக்தி' திட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சியில் தனக்கென ஒரு தனிப் படையை உருவாக்க நினைக்கும் உதயநிதி, பழைய முகங்களை மாற்றிவிட்டுப் புதிய ரத்தத்தைப் பாய்ச்சத் துடிக்கிறார். ஈரோட்டில் உள்ள 8 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்கிற கட்டளை, உண்மையில் முத்துசாமி போன்ற சீனியர்களுக்கு வைக்கப்பட்ட ஒரு அக்னிப் பரீட்சை. அங்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றால், அடுத்த நிமிடம் முத்துசாமி வீட்டுக்கு அனுப்பப்படுவார், பிரகாஷ் முன்னிறுத்தப்படுவார்.

திமுகவில் இப்போது 'சீனியாரிட்டி' என்பது ஒரு சுமையாகப் பார்க்கப்படுகிறது. ஸ்டாலினும், உதயநிதியும் இணைந்து போடும் இந்தத் திட்டத்தால், காலம் காலமாகப் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் பல 'தலைகள்' உருளப்போவது உறுதி. இது கட்சியின் வளர்ச்சிக்கான மாற்றமா? அல்லது சீனியர்களை ஒழித்துக் கட்டிவிட்டு வாரிசு அரசியலை இன்னும் ஆழமாக வேரூன்றச் செய்யும் தந்திரமா? என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பின் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, அறிவாலயத்தில் இனி 'பழைய குருடி கதவைத் திறடி' என்கிற கதை நடக்காது!

About the Author

TR
Thiraviya raj
உதயநிதி ஸ்டாலின்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தேர்தல் சீக்ரெட்ஸ்... தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் 234 தொகுதிகள் உருவானது எப்படி?
Recommended image2
விஜய்யைக் கண்டு மிரளும் எடப்பாடி..! டெல்லிக்கு போட்ட முட்டுக்கட்டை.. அமித் ஷாவின் பிளான்-B..!
Recommended image3
லேசுல எடை போட வேண்டாம்! 50 தொகுதிகளை பதம் பார்க்கும்! ராமதாஸ் - சசிகலா கூட்டணி குறித்த 'பகீர்' சர்வே!
Related Stories
Recommended image1
விஜய்யைக் கண்டு மிரளும் எடப்பாடி..! டெல்லிக்கு போட்ட முட்டுக்கட்டை.. அமித் ஷாவின் பிளான்-B..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved