நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூரில், காலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் சட்ட விரோதமான முறையில் மது பாட்டில்களை விற்றது தொடர்பாக 4 பேர், அப்பகுதி போலீசாரால் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில், டாஸ்மாக் மதுபான பாட்டில்களை, காலை டாஸ்மார்க் திறப்பதற்கு முன்பாகவும், இரவு நேரங்களில் அவை மூடிய பிறகும், சட்டவிரோதமாக கள்ள மார்க்கெட்டில் விற்று வந்த நான்கு பேரை தற்பொழுது மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக, மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாணவர் அணி செயலாளர் பாலகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமத்திவேலூர் பகுதியில் சட்டவிரோதமாக, மதுபானங்கள் விற்கப்படுவதாக, மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம்; ஆய்வுக்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
இதனை அடுத்து பரமத்திவேலூர் பகுதி முழுக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகியான பாலகிருஷ்ணன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 45க்கும் மேற்பட்ட மது பாட்டில்களும், ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு ஸ்பாவில், விபச்சாரம் நடத்தி வந்ததாக கூறி, விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டார். போலீசார் தனது கடைக்கு சீல் வைத்ததை அறிந்து அந்த நபர் தலைமறைவாக இருந்தது, சுமார் 1 வார தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.
