கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம்; ஆய்வுக்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

will build a world class level museum at gangaikonda cholapuram says minister thangam thennarasu

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தினை  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே இந்த அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்து இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களை நேரடியாக பார்வையிட்டுள்ளார்கள். 

அதன் தொடர்ச்சியாக உலக புகழ் வாய்ந்த கங்கைகொண்ட சோழபுரம் கோவில் ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெறக் கூடிய இந்த அகழாய்வுப் பணிகள் இந்த கோவிலின் முக்கியத்துவம், குறிப்பாக சோழப் பெருவேந்தர்களில் தனக்கென மிகப்பெரிய இடத்தினை பிடித்த மாமன்னன் இராஜேந்திர சோழனுடைய பெருமையை பறைசாற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தரத்திலான ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

உலகபுகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மேலும், இந்த அருங்காட்சியகம் எங்கே அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதற்கான அந்த இடத்தை தேர்வு செய்யும் பொருட்டு இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் அருகில் உள்ள இடத்தினையும், குருவாலப்பர்கோவில் அருகே உள்ள மற்றொரு இடத்திலும் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களில் எந்த இடம் மிகவும் சிறப்பாக இருக்கும், அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்பதை முடிவு செய்து பணிகள் துவங்கப்படும். 

கூட்டத்தில் சீறப்பாய்ந்த காளை; தெறித்து ஓடிய தொண்டர்கள்; நொடிப்பொழுதில் கட்டுப்படுத்திய அண்ணாமலை

இத்திட்டத்தின் முக்கியத்துவம் கருதி மிக விரைவில் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களை கவரக்கூடிய வகையில், சிறந்த முறையில், உலகத் தரத்தில் இந்த அருங்காட்சியகம் அமைய வேண்டும். மேலும், இது சோழர்களின் புகழை குறிப்பாக இராஜேந்திர சோழனுடைய புகழை பறைசாற்றும் வகையிலும், கங்கைகொண்ட சோழபுரத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையிலும் அமையவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார் என  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்  தங்கம்தென்னரசு அவர்கள் தெரிவித்தார்.

ஊருக்குள் புகுந்து கடையில் இருந்த வாழைத்தாரை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்த காட்டு யானை

பின்னர், மாளிகைமேடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பின்னர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios