Four hours of warmth rain People have a glue experience ...

காஞ்சிபுரம்

உத்தரமேரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நான்கு மணிநேரம் இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் குளு குளு சூழ்நிலையை அனுபவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கோடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் மக்கள் குளிர்ச்சியில் திளைத்தனர்.

மே 4 முதல் கத்திரி வெயில் ஆரம்பிக்கும் என்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக வேண்டும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. முதல் நாள் கத்தரி வெயிலுக்கே இருவர் பலியாயினர். போக போக மோசமாகும் என்று நினைத்திருந்த மக்களுக்கு பரிசாக வந்தது தான் கோடை மழை.

வெயிலில் தவித்து வந்த மக்கள் கோடை மழையின் குளிர்ச்சியை அனுபவித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று சுமார் நான்கு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும், வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியதால் பூமியும் சற்று குளிர்ச்சி அடைந்தது.

இந்த திடீர் மழையால், உத்தரமேரூரை சுற்றியுள்ள 47 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு மின்சார விநியோகம் சீரானது.