Four fishermen were dizzy for lightning fall when they caught fish in mid sea.
புதுக்கோட்டை
நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி நான்கு மீனவர்கள் மயக்கமடைந்தனர். பின்னர், நால்வரும் மீட்கப்பட்டு மருத்துவமனையி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே உள்ள வடக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி (60). இவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் இவரும், அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (55), முருகானந்தம் (38), ஜெகன் (28) ஆகிய நால்வரும் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென இவர்களது படகின் அருகே மின்னல் தாக்கியது. அதில், பயங்கர சத்தத்துடன் வெளிச்சம் அதிக அளவு ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த நான்கு மீனவர்களும் மயங்கி படகில் விழுந்தனர்.
இதனையடுத்து சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து முருகானந்தம் எழுந்தார். பின்னர் அவர் உறவினர்கள் மற்றும் கடலோர காவல் குழுமத்தினருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் முருகானந்தம் அந்த நாட்டுப்படகினை கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் கரையில் தயாராக இருந்த உறவினர்கள் மற்றும் 108 அவசர ஊர்தி ஊழியர்கள், நால்வரையும் பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி நான்கு மீனவர்கள் மயக்கமடைந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
