காவிரிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு `மக்கள் சந்திப்பு பிரசார பயணம்’ நேற்று தொடங்கியது.

ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் புறப்பட்ட இந்த பயணத்தை, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார்.

இப்பயணம், பல்வேறு மாவட்டங்கள் வழியாக வரும் 11ம் தேதி சென்னையை வந்தடைகிறது. அங்கு கவர்னரை சந்தித்து மனு கொடுக்கின்றனர். பயண நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரி காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணிமண்டபங்களுக்கு சென்று விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்