அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார், நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காத திமுக அரசை கண்டித்துள்ளார். மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காவிட்டால், எடப்பாடியார் தலைமையில் விவசாயிகளைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்: 58 கால்வாய் திட்டம் என்பது 45 ஆண்டுகால உசிலம்பட்டி மக்களின் கனவு திட்டமாகும். இந்த கனவு திட்டத்தை நிறைவேற்று வகையில் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் ஐந்து முறை தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 58 கால்வாய் திட்டத்திற்கும் திருமங்கலம் பிரதான கால்வாய் திட்டத்திற்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கழகப் பொதுச் செயலளார் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் கோரிக்கை வைத்தோம். தற்போது அரசாணை வெளியிடப்பட்டு தண்ணீர் திறக்கப்படும் என்று மகிழ்ச்சியான செய்தி என்பது வரவேற்கத்தக்கது.
தற்போது விவசாயிகள் தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காமல் இருப்பதால் மழையால் நெல்மணிகள் சேதமடைந்து வருகிறது. சேதமடைந்த நிலங்களுக்கு ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். மதுரை மாவட்ட நிர்வாகம் 48 கொள்முதல் நிலைகளை திறக்கப்படும் என்று அறிவித்து இதுவரை 10 தான் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய குழு வந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் செயல் பேப்பர் அளவில் தான் உள்ளது.
தற்போது அலங்காநல்லூர சக்கரை ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கரும்புகளை அருகாமையில் கொண்டு செல்ல முடியாமல் தஞ்சாவூர் போன்ற பகுதிகளுக்கு அனுப்பப்படுவது நமக்கு வேதனையாக உள்ளது. தற்போது நெல் மூட்டை எல்லாம் சேதம் அடைந்து வருகிறது. அரசு கொள்முதல் நிலையங்களை திறக்க திமுக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது முதலமைச்சர் தென் மாவட்டங்களில் முகாமிட்டு உள்ளார். இதை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தற்போது விவசாயிகளுக்கு வேண்டிய உரிய நிவாரண உதவியும், அதே போல தேவையான கொள்முதல் நிலையங்களையும் அரசு திறக்காவிட்டால் கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணையை பெற்று விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
