நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் AI, கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற துறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இளைஞர்கள் இந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் டிஜிபி ரவி அறிவுறுத்தியுள்ளார்.

AI technology impact : நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உலகமும் வேகமாக மாற்றி வருகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு AI மற்றும் இயந்திர கற்றல் துறைகள் தரவு பகுப்பாய்வு, முடிவெடுத்தல் மற்றும் ஆட்டோமேஷனை மேம்படுத்துகின்றன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அதற்கு ஏற்ற படிப்புகளும் உருவாகி வருகிறது. இதனால் மாணவர்கள் எதிர்காலத்தை திட்டமிட்டு செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் படி AI கிளவுட் கம்ப்யூட்டிங் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இளைஞர்கள் தங்கள் துறையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து மேம்படுத்தி கொள்ள வேண்டும் என முன்னாள் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் கிளவுட் தொழில்நுட்பம்

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஈக்காஸ் கிளவுட் என்ற நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழகத்தின் முன்னாள் டிஜிபி எம்.ரவி மற்றும் ஈகாஸ் கிளவுடின் தலைமை செயல் அதிகாரி சுகுமார் ஶ்ரீனிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சி நிறுவனத்தில் படித்த 21 மாணவர்களுக்கு லவ்லி நியுயார்க் அமைப்பின் தலைவர் கே.என்.ரங்கநாதன் பேராசிரியர் சிவக்குமார் வேணுகோபால் சான்றிதழ்களை வழங்கினார். கிளவுட் தொழில்நுட்பம் என்பது இணையம் வழியாக தனி நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் தரவுகளை சேமித்து வழங்குவதை குறிக்கிறது. இது பயனர்களுக்கு தேவையான மென்பொருள், வன்பொருள், சேமிப்பு இடம் மற்றும் பிற தொழில்நுட்ப வளங்களை உடனடியாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்த உதவுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் டிஜிபி எம்.ரவி, உலகளவில் இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகம் உள்ளதாகவும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது குறைவாக உள்ளதாக தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளை விட தற்போது தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது தகவல் தரவு சேமிப்பு (Data storage) வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், உலகளவில் தகவல் தரவு சேமிப்பில் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

இளைஞர்கள் திறமையை மேம்படுத்திக்கொள்ளனும்

தற்போது AI கிளவுட் கம்ப்யூட்டிங் பெரிய வளர்ச்சி கண்டு வருவதாகவும் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இளைஞர்கள் தங்கள் துறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் அப்போது தான் நீங்கள் அந்த துறையில் சிறந்து விளங்க முடியும் என தெரிவித்தார்.