மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகள் தோற்க வேண்டும் - புகழேந்தி
மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்ததாக ஓசூரில் ஓபிஎஸ் அணி நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அணியின் நிர்வாகி ( அண்ணா திமுக கொள்கை பரப்புச் செயலாளர்) பெங்களூரு வா.புகழேந்தி இன்று ஓசூரில் ஜான் போஸ்கோ மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் இந்த நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்.
என்ன ஆபிசர் இதெல்லாம்? வாக்காளர்களுக்காக அதிகாரிகளுடன் மல்லுகட்டிய அண்ணாமலை
மதசார்பற்ற வழியில் அதனை தலைத்தோங்கி அரசியலில் எங்களை உருவாக்கிய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா போன்ற மறைந்த தலைவர்கள் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற வகையில் மதசார்பற்ற ஆட்சி தொடர வேண்டும், இருக்க வேண்டும். அதுதான் நிலைக்க வேண்டும் என்ற அடிப்படையில் எனது வாக்கு அமைந்துள்ளது.
ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த புகழேந்தி, ராமநாதபுரத்தை பொருத்தவரை எனது சொந்த கருத்தாக அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் பலாப்பழம் சின்னத்தில் மாபெரும் வெற்றியை பெறுவார் என தெரிவித்தார்.