Asianet News TamilAsianet News Tamil

கைது செய்யப்பட மாஜி நீதிபதி கர்ணன்... நீதிமன்றத்தில் ஆஜருக்குப்பின், பிரசிடென்சி சிறையில் அடைக்கவுள்ளதாக தகவல்...

Former Calcutta High Court judge C S Karnan arrested from South India West Bengal CID
Former Calcutta High Court judge C S Karnan arrested from South India West Bengal CID
Author
First Published Jun 20, 2017, 9:28 PM IST


கோவையில் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை காலை அவரை மேற்கு வங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு, பிரசிடென்சி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி பின்னர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்குபணிமாற்றம் செய்யப்பட்டவர் நீதிபதி கர்ணன்.. 

தமிழகத்தைச் சேர்ந்தவரான  கர்ணன் சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றிய போது தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவைதனி வழக்காக எடுத்து அதிர்ச்சி கூட்டியவர். 

இதனைத் தொடர்ந்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அப்போது பல்வேறுசர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் தொடர்ந்து கூறி வந்ததால்  உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து இவர் மீது அவமதிப்புவழக்கை தொடர்ந்தது.

Former Calcutta High Court judge C S Karnan arrested from South India West Bengal CID

இருமுறை நீதிமன்றத்தில் கர்ணன் ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவரக் கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.இருப்பினும் விசாரணைக்கு ஆஜராகமல், உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளுக்கு எதிராக பல்வேறு கருத்துகளைதெரிவித்ததால், கர்ணனின்  மனநிலையை பரிசோதனை செய்யும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேருக்கும் மனநிலை பரிசோதனை செய்ய கர்ணன்உத்தரவிட்டார். உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதியான கர்ணன் பிறப்பித்த இந்த உத்தரவு நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக அவருக்கு 6 மாத காலம் சிறைத்தண்டனை விதிப்பதாகஉச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. 

இதனை எதிர்த்து குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் உள்ளிட்டோருக்கு  கர்ணன் கடிதம்எழுதினார். அதில் தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்து செய்யும்படி வலியுறுத்தி இருந்தார்.இருப்பினும் கர்ணனின் கோரிக்கை ஏற்கப்படவில்லை..  இதனையடுத்து அவர் தலைமறைவாகினார். 

Former Calcutta High Court judge C S Karnan arrested from South India West Bengal CID

இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த கர்ணனை கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் வைத்து கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். 

மேலும், கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் இவ்வளவு நாளும் கொச்சியில் மறைந்திருந்ததாகவும், கடந்த திங்கட்கிழமை கொச்சியில் இருந்து கோவை வந்த கர்ணன், மலுமிச்சம்பட்டியிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கொல்கத்தா போலீசார், அவரை மலுமிச்சம்பட்டியில் கைது செய்துள்ளனர். நாளை காலை அவரை மேற்கு வங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு, பிரசிடென்சி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதாக தகவல்.

Follow Us:
Download App:
  • android
  • ios