Asianet News TamilAsianet News Tamil

அரிகொம்பன் யானைக்கு என்ன ஆச்சு.? உடல் மெலிந்ததற்கு காரணம் என்ன.? வனத்துறை விளக்கம்

அரிக்கொம்பன் யானை அரசி போன்ற உணவுகளை சாப்பிட்டதால் உடல் உப்பிசமாக காணப்பட்டதாகவும், தற்போது இயற்கையான உணவான புல் போன்ற காட்டுப்பகுதி உணவுகளை சாப்பிடுவதால் வன விலங்குகளுக்கான உடல்வாகு வந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. 

Forest department explanation regarding health condition of Arikomban elephant
Author
First Published Jun 25, 2023, 10:55 AM IST

புதிய வாழ்விடத்தில் அரிக்கொம்பன்

கேரளா மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை 10க்கும் மேற்பட்டவர்களை தாக்கி கொண்டுள்ளது. இதன் காரணமாக அரிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டு தமிழக எல்லை பகுதியில் விடப்பட்டது. இதனையடுத்து மேகமலை வழியாக தமிழக பகுதிக்குள் நுழைந்த அரிக்கொம்பன் தேனி பகுதிக்குள் புகுந்தது. மேலும் கம்பம் பகுதியில் ஒருவரை தாக்கி சாகடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்ததையடுத்து மீண்டும் மயக்க மருத்து செலுத்தி பிடிக்கப்பட்டது. இதனையடுத்து நெல்லை- கன்னியாகுமரி பகுதியில் யானையானது விடப்பட்டது. இந்த யானையை கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் யானையில் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் மெலிந்துள்ளதாகவும் புகைப்படம் வெளியாகியிருந்தது. 

Forest department explanation regarding health condition of Arikomban elephant

உடல் மெலிந்ததற்கு காரணம் என்ன.?

இது தொடர்பாக களக்காடு முண்டத்முறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா கூறுகையில், அரிக்கொம்பன் யானை மெலிந்த நிலையில் இருந்தாலும் உடல் உறுப்புகள் நல்ல நிலையில் உள்ளது.  தேனி மற்றும் கேரள பகுதியில் அரிசி சாப்பிட்டு வந்ததால் அரிக்கொம்பனின் உடல் உப்பிசமாக காணப்பட்டதாகவும், தற்போது காட்டு உணவுகளான புல் சாப்பிடுவதால் வன விலங்குக்கான உடல்வாகு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அரிக்கொம்பனை தூரத்தில் இருந்து புகைப்படம் எடுத்ததால் யானை உடல் மெலிந்து காணப்படுவதை போல தெரிகிறது என்றும் மற்றபடி யானையின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படி உள்ளது..? சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டாரா.? மருத்துவமனை வெளியிட்ட தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios