tasmac will be closed for 3 days

 மதுக்கடை மூடலால் அரசுக்கு ஏற்கனவே அரசுக்கு 11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆர்கேநகர் தேர்தலை முன்னிட்டு சென்னை மாவட்ட மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது .

அதன் படி, சென்னை மாவட்ட மதுக்கடைகளுக்கு, வரும் ஏப்ரல் 1௦ முதல் 12 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது .

இந்த 3 நாட்கள் மது பிரியர்களுக்கு கொஞ்சம் கசப்பான நாளாக தான் இருக்கும் . 

மேலும் இந்த 3 நாட்கள் மட்டுமின்றி, வாக்கு எண்ணும் நாளான ஏப்ரல் 15 ஆம் தேதியும் மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது. ஆக மொத்தத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பது மதுபிரியர்களுக்கு கூடுதல் தகவல் 

இதனால் மதுபிரியர்கள் முன்னெச்சரிக்கையாக, மது பாட்டில்கள் வாங்கி வைத்துக் கொள்ள திட்டம் தீட்டுவார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையே .