தருமபுரி 

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

வெள்ளப் பெருக்கு காரணமாக விவசாயிகள் தங்கள் கால்நடைகளையும், உடமைகளையும் பாதுகாப்பாக வைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். 

இந்த விழாவில் முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் நாகராசன், முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரங்கநாதன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கோபால், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் கோவிந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.