flag opposite side raised by the police in trichy

தேசிய கொடியை தலை கீழாக ஏற்றிய உதவி ஆய்வாளர்:

நாட்டின் 69-வது குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் பெரும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பள்ளி கல்லூரி அலுவலகம் என அனைத்து இடங்களிலும்,தேசிய கொடி ஏற்றி வீர வணக்கம் செலுத்தினர்.

திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் நாட்டின் 69-வது குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஏற்றினார்.

கொடிக்கு மரியாதை செலுத்தும் போது கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதை கவனித்து கொடியை இறக்கி பின்னர் மீண்டும் சரியாக ஏற்றப்பட்டது.

இந்த சம்பவம் சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இருந்தபோதிலும்,பின்னர் கொடியை சரியாக ஏற்றியதால், சாதாரண சூழல் ஆனது.