திருவள்ளூர் 

திருவள்ளூரில் பன்னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு மூன்று மையங்களும், பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு இரண்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 1-ஆம் தேதி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு தொடங்கி, தொடர்ந்து ஏப்ரல் முதல் வாரம் வரையில் நடைபெற இருக்கிறது. 

அதேபோல, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் இரண்டாவது வாரம் தொடங்க  இருக்கிறது. 

இதில், திருவள்ளூர் தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவலகண்ணன் செட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, திருமுல்லைவாயில் வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, செங்குன்றம் ஹோலிசைல்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளன. 

அதேபோல, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் திருநின்றவூர் கிளாரெட் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் நடைபெறவுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.