மீனவர் கொலை வழக்கில், 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கிசெங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு பட்டிபுலம் கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது மீன்பிடித்த போது இருதரப்பு மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில், பாஸ்கரன் என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக நெம்மேலி குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் ரமேஷ், மோகன், வடிவேல், மேகநாதன், ஞானவேல், கிருஷ்ணன், குப்பன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஞானவேல் என்பவர் உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில், ரமேஷ், மோகன், வடிவேல், மேகநாதன், ஆகிய 4-பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கிருஷ்ணன், குப்பன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.