தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,ஐஎன்எஸ் அடையாறு தளத்தை  வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,முதல்வர் எடப்பாடி  பழனிசாமி,துணை முதல்வர் பன்னீர்செல்வம்,தலைமை செயலாளர்  கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் சென்றனர் ....

இதனை தொடர்ந்து தற்போது கலைவாணர் அரங்கம் சென்றடைந்த பிரதமர் அங்கு, ஐந்து பேருக்கு இருசக்கர வாகனத்தை வழங்கி  சிறப்பிக்க உள்ளார்.

 இவரது வருகை எதிர்பார்த்து எராளனமான பொதுமக்கள் கூடி இருகிறார்கள்...

பலத்த போலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.அரை மணி நேரம் மட்டும் இந்த  விழாவில் பங்கு பெற்று,பின்னர் கவர்னர் மாளிகை சென்றடைகிறார்  பிரதமர்.

இன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கிவிட்டு, நாளை  காலை புதுவைக்கு  செல்கிறார்  பிரதமர்...

 தமிழகத்தில்  முதல் முறையாக  பிரதமர்  நரேந்திர  தங்குகிறார்  என்பது  குறிப்பிடத்தக்கது.