கடலூர் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் எம்.புத்தூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே கோப்பர்குவாரி மலை பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. எம்.புதூர் கிராமத்தில் வனிதா மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான அமைந்துள்ள இந்த பட்டாசு தொழிற்சாலையில் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு சுற்று வட்டாரங்களில் வசிப்பவர்கள் கூலிக்கு வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மதியம் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது பட்டாசு தயாரிருக்கும் ஒரு குடோன் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து தரை மட்டமானது. அங்கு பணியில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்று போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.இந்நிலையில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:கடலூரில் பட்டாசு ஆலை விபத்து.. 3 பேர் பலி.. மீட்பு பணியில் காவல்துறையினர்..
