fire in cotton factory

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் பஞ்சு மில் ஆலை உள்ளது. இதில் திடீரென்று தீ பிடித்தது. இதனால் அங்கிருந்த பஞ்சு மற்றும் நுல்கள் தீக்கு இரையாகின.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலிருந்து உடுமலை செல்லும் சாலையில் தனியார் பஞ்சு மில் குடோன் உள்ளது.இன்று காலை இக்குடோனில் வைக்கப்பட்டிருந்த பஞ்சிலிருந்து தீ பிடித்துள்ளது.

சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் இருந்த பஞ்சுகளில் தீ பரவி மளமளவென ஏறிய தொடங்கியது.

இத்தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் உடனடியாக தீயனைப்புத்துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து காங்கேயம் மற்றும் பல்லடம் பகுதிகளில் இருந்து 8 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்து மின்கசிவினால் ஆனதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்துநாசமாகின.